இல்லத்தில் லட்சுமி கடாக்ஷம் வரவைக்கும் பாடல் கனகதாரா ஸ்தோத்திரம் | Kanakadhara Stotram | #Saindhavi
இல்லத்தில் லட்சுமி கடாக்ஷம் வரவைக்கும் பாடல் கனகதாரா ஸ்தோத்திரம் | Kanakadhara Stotram | #Saindhavi
#Bhakti #KanakadharaStotram #LakshmiSongs #tamilbhakthisongs #TamilDevotionals #BhaktiPadal #Bhakthi #abirami #Devotionalsongs #devotional #god #dailydevotional #ஆன்மீகம் #பக்தி
அபிராமி ஆடியோ பெருமையுடன் வழங்கும் சகல ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் லட்சுமி கடாக்ஷம் வரவைக்கும் கனகதாரா ஸ்தோத்திரம் பாடலை கேட்டு பயன் பெறுங்கள்.
ஜகத்குரு ஆதிசங்கரர் சந்நியாசம் மேற்கொள்வதற்கு முன்பாக, தினமும் சில வீடுகளில் பிட்சைக்குச் செல்வது வழக்கம்.
ஒருநாள் ஆதிசங்கரர் பிட்சைக்குப் போகும் போது ஒரு ஏழைப்பெண்மணியின் வீட்டின் முன் நின்று பிட்சை கேட்டார். வறுமை தாண்டவமாடிக்கொண்டிருந்தது அந்த வீட்டில். அப்படியிருந்தும், அடுத்த நாள் துவாதசி பாரணைக்காக வைத்திருந்த ஒரு வாடிய நெல்லிக்காய் மட்டுமே உணவுப் பொருளாக இருந்தது! பிட்சை கேட்கும் பிள்ளைக்கு இதைத் தவிர கொடுக்க ஏதுமில்லையே என்று பெரிதும் மனம் குமைந்தாள் வீட்டுக்காரப் பெண்மணி.
ஆனாலும், மனம் குறுகி அந்த தெய்வக் குழந்தைக்கு அந்த நெல்லிக்காயை பிட்சையிட்டாள். அடுத்த வேளை உணவுக்கு எந்தப் பொருளும் இல்லாத வறுமையிலும், தன்னிடமிருந்த ஒரே ஒரு நெல்லிக்காயைத் தந்த அந்தப் பெண்மணியின் தாய்மைக் கனிவைக் கண்டு பெரிதும் நெகிழ்ந்தார் ஆதிசங்கரர்.
மகாலட்சுமியிடம் அப்பெண்ணுக்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருளுமாறு உள்ளம் உருகப் பிரார்த்தித்தார். அதைக் கேட்ட திருமகள், ''இப்பெண்மணி, அவளது முந்தைய ஜென்மத்தில் குசேலரின் மனைவியாக வாழ்ந்தவள். கஷ்டங்கள் அனைத்தும் கண்ணன் அருளால் நீங்கி குபேர வாழ்க்கையை மேற்கொண்டபோது, தன் பழைய ஏழ்மைச் சம்பவங்களை மறந்து செல்வச் செருக்கால் ஒருவருக்கும் உதவி செய்யாமல் இருந்தாள். அந்தப் பாவமே இன்று அவளை தாத்ரியமாக வாட்டுகிறது'' என்றாள்.
''அம்மா! எது எப்படியிருந்தாலும் நாளை பாரணைக்கு வைத்திருந்த ஒரே ஒரு வாடல் நெல்லிக்கனியைக்கூட எனக்கு பிட்சையிட்டதால் அவளது அனைத்துப் பூர்வ ஜன்மப் பாவங்களும் நீங்கி விட்டன. தங்கள் கடைக்கண் பார்வை இந்தப் பெண்மணி மீது விழவேண்டும்'' என்று கூறி கனகதாரா ஸ்தோத்திரத்தால் திருமகளைத் துதித்தார். அதனால் மனமிரங்கிய திருமகள் அந்த பெண்மணியின் இல்லத்தில் தங்க நெல்லிக்கனிகளாகப் பொழிய வைத்தாள்.
இந்த பாடலை download செய்ய:
https://www.abiramiaudio.com/shop-2/tamil-devotional/lakshmi/ponmazhai/
இந்த பாடல் வரிகளை download செய்ய:
https://www.abiramiaudio.com/shop-2/lyrics/ponmazhai-lyrics/
To Download Tamil devotional songs:
https://www.abiramiaudio.com/product-category/tamil-devotional/
To learn more about us and download songs:
https://www.abiramiaudio.com/
Subscribe here:
https://www.youtube.com/channel/UCw3HRH5nESm8L0yOgJ9r60Q