“இன்று ஒரு தகவல்” அய்யா தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் சிரிப்புடன் கூடிய சொற்பொழிவு நிகழ்ச்சி .!

“இன்று ஒரு தகவல்” அய்யா தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் சிரிப்புடன் கூடிய சொற்பொழிவு நிகழ்ச்சி .!

4.582.309 Lượt nghe
“இன்று ஒரு தகவல்” அய்யா தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் சிரிப்புடன் கூடிய சொற்பொழிவு நிகழ்ச்சி .!
“இன்று ஒரு தகவல்” அய்யா தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் சிரிப்புடன் கூடிய சொற்பொழிவு நிகழ்ச்சி ..! அய்யா தென்கச்சி கோ. சுவாமிநாதன்  (1946 - செப்டம்பர் 16, 2009) புகழ்பெற்ற பேச்சாளரும், எழுத்தாளரும் ஆவார். “இன்று ஒரு தகவல்” நிகழ்ச்சி மூலம் வானொலி நேயர்களிடையே பிரபலமாக விளங்கினார். அகில இந்திய வானொலியில் உதவி இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தொலைக்காட்சியில் “இந்த நாள் இனிய நாள்” என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தார். பல சிறுகதைகளையும் எழுதியிருந்தார். படித்த இடம்:- தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அரியலூர் மாவட்டம் தென்கச்சிப்பெருமாள் நத்தம் என்ற ஊரில் பிறந்த கோ. சுவாமிநாதன் சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வந்தார். வேளாண்மைப் பட்டதாரி ஆவார். நெல்லை வானொலியில் அறிவிப்பாளராகப் பணியைத் தொடங்கியவர். சென்னை வானொலி நிலையத்தில் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சி வழியாக உலகத் தமிழர் உள்ளங்களில் இடம் பிடித்தவர். திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் நடித்தவர். இவர் தமிழ்நாடு அரசுப் பணியில் விவசாய அலுவலராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் 1977 முதல் 1984 வரை திருநெல்வேலி வானொலி நிலையத்தில் பணிபுரிந்தார். அகில இந்திய வானொலியில் வேளாண்மை நிகழ்ச்சிப் பிரிவு இயக்குனராக இருந்தபோது “வீடும் வயலும்” என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். “அன்பின் வலிமை”, “தீயோர்”, மற்றும் “அறிவுச்செல்வம்” உட்பட பல நூல்களை எழுதியுள்ளார். “இலக்கணம்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். படைப்புகள்:- *இன்று ஒரு தகவல் (பாகம் 1 & 2) *வாழ்க்கையைக் கொண்டாடுவோம் *அய்யாசாமியின் அனுபவங்கள் *தகவல் கேளுங்கள் - கீதம் பப்ளிகேஷன் *உள்ளமே உலகம் - வானதி பதிப்பகம் *அருள்தந்தையின் நகைச்சுவையுணர்வு *சிறகை விரிப்போம் *அனுபவங்கள் அர்த்தமுள்ளவை *கடவுளைத் தேடாதீர்கள் *சிந்தனை விருந்து *நினைத்தால் நிம்மதி