ஆருயிர் ஈசனே ஆனந்த கூத்தனே ......

ஆருயிர் ஈசனே ஆனந்த கூத்தனே ......

720.146 Lượt nghe
ஆருயிர் ஈசனே ஆனந்த கூத்தனே ......
please Like, Subscribe my channel and click bell icon. அழகர் , தாயினும் இனியவர், ஆனந்தக் கூத்தரசர்....... அவர் மீது எமக்குள்ள அளவற்ற அன்பும் பக்தியும் உன்னி கிருஷ்னன் அவர்களின் இனிய குரலாலும் பாடல் வரிகனிளாலும் மேலும் பொங்கிப் பிரவாகிக்கிறது. இந்தப் பாடல் வரிகளுக்கும் குரலுக்கும் இசைக்கும் மனமார்ந்த நன்றிகள். வாழ்க வளமுடன். பாடல் வரிகள் ஹர ஹர சிவ சிவ ஓம்.. ஓம்..ஓம் ஹர ஹர சிவ சிவ ஓம் ஹர ஹர சிவ சிவ..சிவ சிவ ஹர ஹர ஹர ஹர சிவ சிவ ஓம்... ஓம்..ஓம் ஹர ஹர சிவ சிவ ஓம் அருனையின் பெருமகனே எங்கள் அண்ணாமலை சிவனே ஆடிய பாதத்தில் ஓர் இடம் வேண்டும் (2) அருள்வாய் ஈஸ்வரனே ... அன்பே அருணாச்சல சிவனே ஹர ஹர சிவ சிவ ஓம் ஓம்..ஓம் ஹர ஹர சிவ சிவ ஓம் அபயம் அபயம் அண்ணாமலையே ஹர ஹர சிவ சிவ ஓம் ... ஓம்..ஓம் ஹர ஹர சிவ சிவ ஓம் கானகம் ஏவிடும் மாந்தனை பாசமாய் கரமதில் பிடித்தவனே மானிடர் யாரையும் மான் என ஏற்பாய் (2 ) மலையென எழுந்தவனே எங்கள் அருணாச்சல சிவனே (ஹர ஹர ..) ஆடக பொன்என பாம்பணி மாலையை அணியும் கிருபாகரனே பாலூறும் எங்கள் பக்தி பிரவாகத்தை (2 ) அணிவாய் அவசியமே! எங்கள் அருணாச்சல சிவமே! (ஹர ஹர..) வன்புலி தோலினை பொன்னிடை மீதினில் போர்த்திய பரமேசா! அன்பெனும் நூல் கொண்டு ஆடை தருகிறோம்(2) அணிந்திரு அரவிந்தமே எங்கள் அருணாச்சல சிவமே! (ஹர ஹர..) அண்டம் இருண்டிட கண்டம் கறுத்திட நஞ்சினை சுவைத்தவனே! அமுதம் போல் எங்கள் மனம் உள்ளதே (2) அதை நீ அருந்திடுமே எங்கள் அருணாச்சல சிவமே! (ஹர ஹர..) ரிஷபமே வாகனம் தெருவினில் ஊர்வலம் தினம் செல்லும் குருமணியே ஏழைகள் இதயமும் வாகனம் தானே(2 ) ஏறிட மனதில்லையோ! எங்கள் அருணாச்சல சிவமே! (ஹர ஹர..) சச்சரின் கொக்கரை மத்தளம் உடுக்கையும் வாசிக்கும் விமலேசா! எங்களின் நெஞ்சகம் வாசித்து பழகிட (2) நேரம் உமக்கில்லையோ! சொல்வாய் அருணாச்சல சிவமே (ஹர ஹர..) தந்தன தனவென கையினில் நெருப்புடன் ஆடிடும் கூத்தரசே! அம்பலம் போல் எங்கள் நெஞ்சகம் உள்ளதே(2) ஆடிடுவாய் உடனே! எங்கள் அருணாச்சல சிவனே ! (ஹர ஹர..) பொங்கிடும் கங்கையை செஞ்சடை மீதினில் கொண்ட குணாநிதியே உன் திரு வாசலில் ஆயிரம் கங்கையே (2) கண்களில் ஊறிடுமே ! அதில் குளி அருணாச்சல சிவமே (ஹர ஹர ) மாலவன் சோதரி மங்கள ரூபிணி இடப்புறம் சுமந்தவனே தாயினை சுமந்த நீ பிள்ளையை விடுவது (2) நியாயமோ ஈஸ்வரனே ? ஏற்பாய் அருணாச்சல சிவனே! (ஹர ஹர..) சிந்தையில் சிவ மனம் வீசுது தினம் தினம் அறிவாய் அமரேசா! உன்னுடன் கலந்திடும் நாள் எது சொல்லிடு(2) வரமதை உடன் தருமே எங்கள் அருணாச்சல சிவமே! (ஹர ஹர..) ஆருயிர் ஈசனே ஆனந்த கூத்தனே அய்யா அணைத்திடுக சிவமே சிவமே தருவாய் நலமே! (2) அபயம் தா அரணே! எங்கள் அருணாச்சல சிவமே ஹர ஹர ஹர ஹர சிவ சிவ ஓம் ஓம். .ஓம் ஹர ஹர சிவ சிவ ஓம் அபயம் அபயம் அண்ணாமலையே ஹர ஹர சிவ சிவ ஓம் ... ஓம்..ஓம் ஹர ஹர சிவ சிவ ஓம் அருனையின் பெருமகனே எங்கள் அண்ணாமலை சிவனே ஆடிய பாதத்தில் ஓர் இடம் வேண்டும் அருள்வாய் ஈஸ்வரனே ... அன்பே அருணாச்சல சிவனே ஹர ஹர சிவ சிவ ஓம் ஓம்..ஓம் ஹர ஹர சிவ சிவ ஓம் அபயம் அபயம் அண்ணாமலையே ஹர ஹர சிவ சிவ ஓம் ... ஓம்..ஓம் ஹர ஹர சிவ சிவ